Jun 17, 2025 - 06:04 PM -
0
காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுத்தாபனத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வெரன்ஸ் கங்கை திட்டத்தின் முதல் கட்ட திறப்பு விழாவிற்கு கொள்முதல் நடைமுறைக்கு வெளியே ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் விழாவிற்கு திட்ட நிதியில் இருந்து எந்த பணமும் ஒதுக்கப்படாத நிலையில், விழாவிற்கு திட்ட நிதியில் இருந்து 276 மில்லியன் ரூபாய் செலவழித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அதன்படி, கூட்டுத்தாபனத்தின் முன்னாள்பிரதி பொது முகாமையாளர் சுஜித் பிரியந்த முத்துமால, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய இன்று (17) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.