Jun 27, 2025 - 11:53 AM -
0
பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவரும், நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கலைஞருமான ஜி. சீனிவாசன் (95) உடல்நலக் குறைவால் சென்னை சூர்யா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1933-ல் தஞ்சாவூரில் பிறந்த ஜி. சீனிவாசன், சிறுவயதிலேயே கலைகள் மீது ஆர்வம் கொண்டு, பாடசாலையில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள் வென்றார்.
சென்னைக்கு வந்து நாடகக் குழுவில் இணைந்து, கதை எழுதுதல், இயக்குதல், நடிப்பு என புகழ்பெற்றார்.
பின்னர், சொந்த நாடகக் குழுவைத் தொடங்கி, வரலாற்று மற்றும் குடும்ப நாடகங்களை நடத்தினார். திரைப்படத் துறையில் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். நவரச நடிப்பில் தனித்திறமை பெற்றவர்.
தனது மகனின் இழப்புக்குப் பின், அவரும் புலியூர் சரோஜாவும் திரையுலகிலிருந்து விலகி, புத்திர சோகத்தில் மூழ்கினர்.
வயது மூப்பால் அவதிப்பட்ட சீனிவாசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.