Jul 4, 2025 - 08:35 AM -
0
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அடையாளம் தெரியாத நபர், கூரியர் டெலிவரி முகவர் போர்வையில், வீட்டிற்கு சென்று 22 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய சம்பவம், அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் உள்ள கோண்ட்வா பகுதியில் 22 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், தனது சகோதரருடன் வசித்து வருகிறார். நேற்று மாலை அந்த பெண்ணின் சகோதரர் வெளியில் சென்றுள்ளார்.
அப்போது சுமார் 7.30 மணியளவில், கூரியர் டெலிவரி முகவராக ஒருவர் வந்துள்ளார். இந்த பெண் வீட்டு கதவை தட்டியுள்ளார். அவரும் கதவை திறந்துள்ளார். அப்போது டெலிவரி முகவர் வேடத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர், அந்த பெண்ணிடம் கையெழுத்து போட பேனா வேண்டும் எனக் கேட்டுள்ளார். அவருடம் பேனா எடுக்க திரும்பியபோது, நைசாக வீட்டிற்குள் நுழைந்து கததை பூட்டியுள்ளார்.
அதன்பின் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. சுமார் 8.30 மணியளவில் நினைவு வந்துள்ளது. அப்போதுதான் என்ன நடந்தது என்பதை அவரால் யூகிக்க முடிந்துள்ளது. உடனடியாக உறவினர்களுக்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார். அவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு போன் செய்ய, பொலிசார் அந்த நபரை தேடியுள்ளனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் தனது போனை எடுத்தபோது, அதில் அவருடன் இருக்கும் செல்பி போட்டோ ஒன்றை எடுத்து வைத்துள்ளார். மேலும், இது தொடர்பாக முறைப்பாடு அளித்தால் எடுத்த படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என டைப் செய்து வைத்துள்ளார்.
அந்த நபர் பெண்ணுக்கு மயக்கம் அடையும் வகையில் ஏதாவது செய்திருக்கலாம். ஒருவேளை ஸ்பிரே பயன்படுத்தப்பட்டுள்ளதாக என்பதை பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்.
அந்த நபரின் முகம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து அவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.