Jul 4, 2025 - 10:18 AM -
0
புத்தளம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த முந்தல் ஶ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் நேற்று (03) இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
முந்தல் ஶ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ ச. சத்தியலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மகாபாரதப் போரில் இடம்பெறும் கதையம்சத்தை கருப்பொருளாகக் கொண்டு இந்த திருவிழா நடைபெற்று வருவது மரபு வழியாகும்.
இதன்போது பக்தர்கள் பலர் இந்த பூஜையில் கலந்து கொண்டதுடன், அம்மனின் அருளையும் பெற்றுக்கொண்டனர்.
--