Jul 4, 2025 - 12:00 PM -
0
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் ஒளிபரப்பு விருதுகள் விழாவில் 'அத தெரண' (Ada Derana) இரண்டு விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் 'Sri Lanka Decides' முடிவுகள் ஒளிபரப்பிற்காக, சிறந்த கிராஃபிக் அனிமேஷன் மற்றும் சிறந்த இணைய இசை கண்காணிப்பு முறைமை ஆகியவற்றிற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் 'TV Derana' இன் 'Sri Lanka Decides' முடிவுகள் ஒளிபரப்பு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதுமையான அனுபவத்தை இலங்கை மக்களுக்கு வழங்கியது.
அதன்படி, 'Sri Lanka Decides' 2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஒளிபரப்பிற்காக, ஆசியாவின் சிறந்த தேர்தல் கிராஃபிக் அனிமேஷனுக்கான 'Technology Animation' விருதை 'Ada Derana 24' தொலைக்காட்சி அலைவரிசை வென்றது.
மற்றொரு விருதை, சிறந்த இணைய இசை கண்காணிப்பு முறைமைக்காக 'Derana Macro Entertainment' இன் 'eTunes Audio Streaming & Monitoring System' வென்றது..
இந்த விருது விழாவில் இலங்கையைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இவ்வாறு விருது பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.