வணிகம்
Dongfeng உடன் இணைந்து இலங்கைச் சந்தைக்கு hatchback வடிவ வாகனத்தை அறிமுகப்படுத்தும் Euro Motors

Jul 4, 2025 - 03:11 PM -

0

Dongfeng உடன் இணைந்து இலங்கைச் சந்தைக்கு hatchback வடிவ வாகனத்தை அறிமுகப்படுத்தும் Euro Motors

உலகின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Dongfeng உடன் பங்காளித்துவத்தை மேற்கொண்டு, இலங்கைச் சந்தையில் அதிநவீன வாகனங்களை Euro Motors உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 1969இல் நிறுவப்பட்ட பிரபல Dongfeng நிறுவனம், உலகளாவிய ரீதியில் தரப்படுத்தப்பட்டுள்ள, Global Fortune 500 இன் 500 மிகப் பெரும் நிறுவனங்களில் ஒன்றாகும். 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்படும் இந்நிறுவனம், உலகம் முழுவதும் 60 மில்லியனுக்கு மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் இலங்கைக்கான வருகையானது, நாட்டின் மின்சார போக்குவரத்து வளர்ச்சியில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. 

இது குறித்து Euro Motors Pvt Ltd. நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ரவீந்திர சேனாரத்ன கருத்து வெளியிடுகையில்: நம்பகமான வீட்டு பெயராக Euro Motors தனது பெயரை நிறுவியுள்ளது. தரமான வாகனங்களை வழங்கி, நம்பிக்கையான சேவைகளை வழங்கி, பல தசாப்தங்களாக களத்தில் முன்னின்றுள்ளோம். தற்போது Dongfeng வாகன வரிசையை எமது விநியோகச் சங்கிலியில் இணைத்துக் கொண்டமையானது, மின்சாரத்தில் இயங்குதல், திறனான செயற்பாடு, எதிர்பார்ப்புகளை கடந்த பொறியியலை பயன்படுத்தி, எதிர்காலத்தை நோக்காகக் கொண்ட அடுத்த பரிணாமமாகும். இலங்கைச் சந்தையில் நீண்ட காலத் திட்டத்துடன் Dongfeng வந்துள்ளது. அந்த வகையில், எமது வாடிக்கையாளர்களுக்கு நீண்டகால மதிப்பையும் உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து திறனையும் வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். என்றார். 

இந்த அறிமுகத்தில் முன்னணியில் காணப்படுவது Dongfeng Box வாகனமாகும். இது முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஒரு hatchback வடிவ வாகனம் ஆகும். நவீன தொழில்நுட்பம், விசாலமான வடிவமைப்பு மற்றும் கட்டுப்படியான விலை ஆகியவற்றை இது ஒன்றிணைக்கிறது. உயர்தர வாகனங்களில் மட்டுமே காணக்கூடிய வசதிகளுடன் கூடிய இந்த வாகனம், வாகனத்தை செலுத்துவதில் நவீன அனுபவத்தை வழங்குகிறது. இது அதன் வழக்கமான விலையான ரூ. 1 கோடியை விட ரூ. 2,50,000 குறைவானது என்பதால் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த இலாபமாக காணப்படுகின்றது. 

Dongfeng Box வாகனமானது, அதே பிரிவில் காணப்படும் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறந்த விசாலமான அளவு மற்றும் உள்ளக அம்சங்கள் மூலம் தனித்துவம் பெறுகிறது. 1810mm அகலமான வாகன உடலமைப்பு, 2660mm எனும் இதே பிரிவில் உள்ள வாகனங்களை விட மிக நீளமான வீல்பேஸ் (wheelbase) கொண்டது. இதே பிரிவில் விசாலமான உள்ளக இடவசதி மற்றும் உண்மையான ஐந்து ஆசன வசதி கொண்ட வாகனமாக இது காணப்படுகின்றது. நாளாந்த பயணங்களை எளிதாக்கும் வகையில், 540 degree panoramic கமெரா கட்டமைப்பு, auto-parking வசதி, காற்றோட்டமான முன் இருக்கைகள், Level 2 ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இதே வகையில் உள்ள வாகனங்களுடன் ஒப்பிடுகையில் Dongfeng Box ஆனது, சிறப்பு மிக்க பல்வேறு அம்சங்கள் கொண்ட, கட்டுப்படியான விலையை கொண்டுள்ளது. 

Euro Motors Pvt Ltd. நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர் இம்தியாஸ் இது குறித்து தெரிவிக்கையில், Dongfeng வாகனத்தின் அறிமுகமானது, Euro Motors நிறுவனத்திற்கும் இலங்கையின் மோட்டார் வாகனத் துறைக்கும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். Dongfeng Box என்பது ஒரு ஆரம்பம் மாத்திரமே ஆகும். தொழில்நுட்பம், பெறுமதி மற்றும் புத்தாக்கத்தை கொண்ட மேலும் பல மின்சார வாகனங்களை (EV) எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். என்றார். 

இலங்கைக்கு பல்வேறு வாகன சேவை தொடர்பான நன்மைகளையும் Dongfeng வழங்க முன்வந்துள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு வாகனத்திற்கும் உதிரிப்பாகங்கள் மற்றும் பணியாள் செலவு உள்ளடங்கலாக 1 வருடம் அல்லது 20,000km வரை இலவச சேவை வழங்கப்படும். அதனைத் தொடர்ந்தான மேலும் 3 வருடங்களுக்கு அல்லது 60,000km வரை பணியாள் செலவு மாத்திரம் கொண்ட மேலதிக செலவுகள் அற்ற இலவச சேவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனத்துடனும் அதற்குரித்தான வீட்டுப் பயன்பாட்டு மற்றும் பயணத்திற்கான வெளிப்பயன்பாட்டு சார்ஜர்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் மின்கலம் மற்றும் drivetrain (சக்கரங்களை இயக்கும் தொகுதி) உள்ளடங்கலாக 8 வருடம் அல்லது 200,000km வரையான பரந்த உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. வாகனத்தின் பெறுமதியில் 90% வரை வங்கிக் கடன் வசதிகளை பெற முடியும் என்பதால், பரந்த வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் காலப் பகுதியில் மேலும் பல வாகன மாதிரிகளை அறிமுகப்படுத்த Euro Motors மற்றும் Dongfeng இணைந்து திட்டமிட்டுள்ளன. Dongfeng Box இன் அறிமுகமானது, இலங்கை மோட்டார் வாகனத் துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஒரு ஆரம்பமாகும். இலங்கையில் மின்சார வாகனங்களின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதற்கு Dongfeng தயாராக உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05