Jul 4, 2025 - 04:02 PM -
0
பிரபலங்கள் திடீரென திருமணம் செய்வது குறைந்த வருடங்களில் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்வது அனைத்து துறையிலும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது.
அப்படித்தான் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பெயரும் அடிபடுகிறது. அதிரடி ஆட்டக்காரரான ஹர்திக், ஆல்ரவுண்டராக செயல்பட்டு வருகிறார். குறுகிய காலத்தில் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
ஒருநாள் கிரிக்கெட், டி20, ஐபிஎல் என அனைத்து விதமான போட்டிகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் 2020ஆம் ஆண்டு செர்பியாவை சேர்ந்த நடிகை நடாஷாவை திருமணம் செய்திருந்தார். திருமணம் ஆகும் போதே அவர் கர்ப்பமாக இருந்தார்.
பின்னர் அவர்களுக்கு மகன் பிறந்தான். இந்த ஜோடி 2023ல் விவாகரத்தும் செய்தது. 4 வருடங்களுக்குள் இந்த ஜோடி பிரிந்தது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகையான ஈஷா குப்தா உடன் அவர் காட்டிய நெருக்கம் தான் காரணம் என கூறப்படுகிறது. ஹர்திக்கை விட 8 வயது மூத்த நடிகையான ஈஷா குப்தாவை டேட்டிங் செய்ததாக தகவல் பரவியது.
இது குறித்து முதல்முறையாக பேசிய ஈஷா, நாங்க ரெண்டு மாசம் தான் பேசி பழகினோம். ஆனால் அதன் பின் அது உறவாக மாறவில்லை, எங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை.
எங்களுக்குள் இருந்தது, உறவாக மாற வாய்ப்பு இருந்தது, ஆனால் ஒற்றுமை இல்லாததால் அது அடுத்த கட்டத்துக்கு போகவில்லை. வேறு எதுவும் நடக்கவில்லை என ஓபனாக பேசியுள்ளார்.