இந்தியா
பா.ம.க. தலைமை நிர்வாகக்குழு கலைப்பு - புதிய குழு உருவாக்கம்

Jul 5, 2025 - 12:18 PM -

0

பா.ம.க. தலைமை நிர்வாகக்குழு கலைப்பு - புதிய குழு உருவாக்கம்

பா.ம.க.வில் தலைமை நிர்வாகக்குழு செயல்பட்டு வந்தது. இந்த குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்து வந்தனர். 

இந்த நிலையில் தற்போது அந்த குழு கலைக்கப்பட்டுள்ளது. பின்னர் புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த புதிய பா.ம.க. நிர்வாக குழுவில் ஜி.கே.மணி, முரளி சங்கர், கரூர் பாஸ்கர், அருள், பரந்தாமன், சிவபிரகாசம், தீரன், புதா.அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05