Jul 5, 2025 - 04:55 PM -
0
வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவின் ஆகியோரின் தலைமையில் திறக்கப்பட்டது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் கைத்தொழில் அமைச்சு ஜனாதிபதியிடம் முன்வைத்த முன்மொழிவைத் தொடர்ந்து இது நிறுவப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறுமதி சேர் வரியை திரும்ப வழங்குவதே இதன் நோக்கமாகும்.
அதன்படி, 50,000 ரூபாவுக்கும் அதிகமான VAT வரியை செலுத்தி, 90 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், இந்த கரும பீடம் மூலம் செலுத்திய VAT வரியைப் பெற முடியும்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கைப் பொருட்களை வாங்குவதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி அறவிடுவதை நெறிப்படுத்துவதற்காகவும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.