Jul 5, 2025 - 05:36 PM -
0
இன்றைக்கு உலக அளவில் பெரும்பாலானோரிடம் செல்போன் இருக்கிறது. அது இல்லை என்றால் வாழ்க்கையில் எதுவுமே நடக்காது என்ற நிலைக்கு பலர் ஆளாகியுள்ளனர்.
செல்போனே கதியென்று மூழ்கியுள்ள இளைய சமூகம், சோஷியல் மீடியாவில் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றனர்.
முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, செல்போன் குறித்து வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
சமந்தா கூறுகையில், ‘எப்போதுமே என் கையில் ஒரு செல்போன் இருக்கும். ஆனால், திடீரென்று அதுகுறித்து ஏற்பட்ட சிந்தனை என்னை மிகவும் வியக்க வைத்தது. இதையடுத்து 3 நாட்கள் என் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன்.
யாருடனும் பேசவில்லை. யாரையும் தொடர்புகொள்ளவில்லை. யாரையும் நேரில் பார்க்கவில்லை. புத்தகம் படிப்பது, எழுதுவது என்று எந்த வேலையும் செய்யவில்லை.
3 நாட்கள் என் மூளைக்கு முழுமையான ஓய்வு கொடுத்தேன். உண்மையிலேயே இது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. என் ஈகோவின் பெரும்பகுதி செல்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தாமதமாக உணர்ந்தேன்.
நான் யார், எவ்வளவு முக்கியமானவள், திரையுலகில் என்ன சாதித்தேன் என்பதை செல்போன்தான் சொல்கிறது.
அது இல்லாதபோது, நான் ஒரு சாதாரண உயிரினம் என்ற எண்ணமே ஏற்பட்டது. இந்த வாழ்க்கையில் பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் செல்போன்கள் நம்மை செயற்கையான விடயங்களில் மூழ்கடித்து விடுகின்றன.
நமது முன்னேற்றத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் செல்போன் எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டேன்’ என்றார்.