செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோவிற்கு 30% வரி விதித்த டிரம்ப்!

Jul 12, 2025 - 07:14 PM -

0

ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோவிற்கு 30% வரி விதித்த டிரம்ப்!

மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 30% தீர்வை வரியை விதித்துள்ளார். 

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வரி விதிப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றையிட்டு இதனை அறிவித்துள்ளார். 

பிரதான வர்த்தக பங்காளிகளுடன் பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் ஊடாக விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டத் தவறியதை அடுத்து, இந்த வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். 

இந்த வார தொடக்கத்தில், இலங்கையுடன், ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் புதிய வரி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டிருந்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05