வடக்கு
மறைந்த தலைவர் சம்பந்தனின் நினைவு தினம்

Jul 13, 2025 - 05:17 PM -

0

மறைந்த தலைவர் சம்பந்தனின் நினைவு தினம்

மறைந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் நினைவு தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்றது.

 

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற குறித்த நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண முன்னாள் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

இரா.சம்பந்தனின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05