பல்சுவை
விவாகரத்தை கொண்டாடிய நபர்

Jul 14, 2025 - 03:47 PM -

0

விவாகரத்தை கொண்டாடிய நபர்

இந்தியாவின் அசாம் மாநிலம் நல்பாரி மாவடடத்தில், மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றதை தனக்குத்தானே பாலாபிஷகம் செய்து ஒருவர் கொண்டாடியுள்ளார்.

 

நல்பாரி மாவட்டம் போரோலியபாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் மணிக் அலி. இவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவரது மனைவி இரண்டு முறை திருமணத்திற்கு புறம்பான உறவை வைத்துக் கொண்டு, வீட்டில் இருந்து இரண்டு முறை வெளியேறியுள்ளார். ஆனால் தனது குழந்தைக்காக இரண்டு முறையும் சமரசம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

 

இருந்தபோதிலும், உறுதியற்ற நிலையிலேயே இருவரும் வாழ்ந்து வந்தனர். இதனால் சட்டப்பூர்வமாக பிரிவதற்கு முடிவு செய்தனர். இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பித்தினர்.

 

இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. இன்றில் இருந்து எனக்கு விடுதலை என சந்தோசம் அடைந்துள்ளார்.

 

அத்துடன் 40 லிட்டர் பால் வாங்கி, எனக்கு இன்று முதல் எனக்கு விடுதலை எனக் கூறிக்கொண்டே தனக்குத்தானே பாலாபிஷேகம் செய்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05