வடக்கு
'சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்' திறந்து வைப்பு

Jul 15, 2025 - 10:43 AM -

0

'சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்' திறந்து வைப்பு

'சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்' யாழ். நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில் நேற்று (14) மாலை திறந்து வைக்கப்பட்டது.

 

வைத்திய கலாநிதி சன்முகநாதன் அருந்ததி தம்பதிகளின் நினைவாக வைத்திய நிபுணர் மனோமோகன் சிவகௌரி தம்பதிகளால் நிறுவப்பெற்ற இந்த அரங்கம், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி. ஆறு திருமுருகன் தலைமையில், வைத்திய நிபுணர் மனோமோகன் தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குனராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

இதன்போது சிவபூமி திருவாசக அரங்க மண்டப திறப்பு விழா- மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05