Jul 15, 2025 - 01:25 PM -
0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். அப்துல் வாஸித் நேற்று (14) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம சந்தித்து பொத்துவில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடினார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பொத்துவில் பிரதேச செயலக காணி பிரிவில் ஏற்பட்டுள்ள தடங்கள், அங்கு இருக்கின்ற ஆளணிகள் பற்றாக்குறை மற்றும் வன இலாக திணைக்களத்தினால் எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல் எல்லைகற்கல் இடுவது, காணிகள் கையகப்படுத்துவது சம்மந்தமாக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அதே போன்று பொத்துவிலிலுள்ள முக்கிய பிரச்சினையான மக்களுக்கு அன்றாடமாக பாவிக்கக் கூடிய ஆற்று மணல் அகழ்வுகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய தடங்கள்கள் சிக்கல்கள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
மணல் அகழ்வு சம்மந்தமான தடங்கள்களை தீர்ப்பதற்காக உடனடியாக செயற்பட்ட அரசாங்க அதிபர் அவர்கள் பொத்துவில் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் (Irrigation Engineer), DDI, பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் Engineer GSMB அதிகாரிகள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளையும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உரிய சிக்கல்களை நிவர்த்திக்குமாறு அறிவுருத்தல் வழங்கினார்.
மேலும் மேற்குறிப்பிட்ட மற்றைய பிரச்சினைகள் தொடர்பாக பொத்துவில் பிரதேச செயலகத்தில் காணப்படுகின்ற காணி பிரிவில் ஆவணங்கள் வழங்கள் சம்மந்தமாக உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்ததுடன் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக இருந்து அரசியலில் உச்சம் தொட்ட ஒரு அரசாங்க உத்தியோகத்தர் என்ற வகையில் தன்னுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் தன்னிடம் நம்பிக்கை தெரிவித்ததுடன் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக இருந்து அரசியலில் உச்சம் தொட்ட ஒரு அரசாங்க உத்தியோகத்தர் என்ற வகையில் அரசாங்க அதிபர் தனது வாழ்த்துக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித்துடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
--