Jul 15, 2025 - 02:19 PM -
0
நுவரெலியா - தெல்தோட்டை, லூல்கந்துர அப்பகோணா தோட்டத்தில் வசித்து வரும் மக்கள் வழிப்பாடுகளில் ஈடுப்படுவதற்க்கு ஆலயம் இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர்.
தெல்தோட்டை லூல்கந்துர அப்பகோணா தோட்டத்தில் இருக்கும் சிவன் கோவில் கட்டப்பட்டு பல வருடகாலமாக இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில், ஆலயத்தின் வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கான அடிக்கல் நாட்டி ஆரம்பிக்கப்பட்டது.
ஹங்குராங்கெத்த பிரதேச சபை உப தவிசாளர் கே.ரூஸன்ஸ் மற்றும் அப்பகோணா தோட்ட முகாமையாளர் சமிந்த பண்டார தோட்ட உதவி முகாமையாளர் சமீர அதிகாரிகள் தலைமையில் ஆலய நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது ஞாபக சின்னமாக மரகன்றுகள் நாட்டிவழிப்பாடுகள் இடம்பெற்றது. இதில் தோட்ட மக்கள் தோட்ட தலைவர்கள் இளைஞர்கள் கலந்துகொண்டு இருந்தனர்.
அங்கு வசிக்கும் தோட்ட மக்கள் குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளனர், நாட்டில் பல பாகங்களில் வசிக்கும் சிவன் பக்தர்கள் பணம் படைத்தவர், மனம் படைத்தவர் நல் உள்ளங்கள், இந்த ஆலயத்திற்க்கு பொருட்கள் அல்லது நிதி உதவிகளை வழங்கி எமது ஆலயத்தை முழுமையாக செய்து தந்து உதவுமாறு தோட்ட மக்கள் கேட்டுகொள்கின்றனர்.
ஆலயத்திற்கு எதேனும் நிதி உதவிகளை வழங்க ஆலயத்தின் கீழ்வரும் பரிபாலன சபை குழுவினரை தொடர்புகளை மேற்கொள்ளவும், 0770706318 நாகேந்திரன், 0771397900 புஸ்ப்பராஜ்.
--