Jul 15, 2025 - 04:54 PM -
0
அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக நோர்வூட் பிரதேச செயலகத்தின் முன்பாக இன்று (15) நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
அஸ்வெசும தொகையை பெற்றுக் கொள்வதற்காக கடந்த நான்கு மாதங்களாக காத்திருந்ததாகவும் இதனால் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அங்கு வந்திருந்த அஸ்வெசும பயனாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரை காத்திருந்து ஏமாற்றமாகவே திரும்பி சொல்லுகிறோம் அவ்வாறு நாங்கள் காத்திருந்தாலும் வீட்டுக்கு போகுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
எமக்கு எவ்வித கொடுப்பனவுகளும் இல்லை நாங்கள் கடந்த பத்து மாதங்களாக வந்து சொல்லுவதாக தெரிவித்தனர். இதேவேளை இன்று (15) காலை முதல் அஸ்வெசுமவினை பெற்றுக்கொள்ள நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
--