கிழக்கு
குப்பை ஏற்றிச்செல்லும் ரெக்டரில் சென்று போராட்டம்!

Jul 16, 2025 - 04:02 PM -

0

குப்பை ஏற்றிச்செல்லும் ரெக்டரில் சென்று போராட்டம்!


தங்கள் பிரதேச சபைகளுக்குத் தேவையான வாகனங்கள் இன்று வரை வழங்கப்படாத சூழ்நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இன்று நூதன முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 

இதுவரையில் தமது சபைகளுக்கான வாகனங்கள் வழங்காத நிலையில் இன்று (16) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சரின் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, கழிவு மற்றும் குப்பை ஏற்றிச் செல்லும் ரெக்டர்களில் செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் பயணித்துள்ளனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05