வணிகம்
வாடிக்கையாளர் வைப்புத்தொகையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வங்கிகள் மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) வலுவான ஆதரவையும் உறுதிப்படுத்துகின்றன

Jul 16, 2025 - 04:21 PM -

0

வாடிக்கையாளர் வைப்புத்தொகையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வங்கிகள் மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) வலுவான ஆதரவையும் உறுதிப்படுத்துகின்றன

நாட்டில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைக்கிணங்க பராட்டே (Parate) சட்டங்களைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கடன் பெறுநர்களில் அடங்கும் சிறிய குழு வொன்று மேற்கொள்ளும் முயற்சிகளை உறுதியாக நிராகரித்ததுடன் மேலும் சலுகை காலம் முடிவடைந்திருந்தாலும் வங்கிகள் தற்போது பரவலான பராட்டே (Parate) நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விரும்பவில்லை என்று வர்த்தக சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும் உறுதியளித்துள்ளது. 

மார்ச் 31, 2025 வரை பராட்டே (Parate) சட்டங்களை அரசாங்கம் இடைநிறுத்தியதைத் தொடர்ந்து, வங்கித் துறை தானாக முன்வந்து மேலும் மூன்று மாதங்களுக்கு சலுகைக் காலத்தை நீடித்தது, இதனால் சிரமத்தில் உள்ள கடன் பெறுபவர்கள் வங்கிகளுடன் தொடர்பு கொள்ளவும், தங்கள் கடன்களை மறுசீரமைக்கவும் முடிந்தது. இதன் விளைவாக, பல கடன் பெறுநர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மேலும் சலுகையை பெற்றனர், சில சந்தர்ப்பங்களில் சலுகைக் காலமானது டிசம்பர் 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் காலகட்டம் முடிவடைந்த நிலையில், ஒரு சில கடன் பெறுநர்கள் மீண்டும் எதிர்ப்பை ஆரம்பித்துள்;ளதுடன் இவர்கள் பராட்டே (Parate) நடவடிக்கைகள் மற்றும் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களின் ஏலங்கள் குறித்து பீதியைத் தூண்ட முயற்சிக்கின்றனர். பெரும்பாலான கடன் பெறுநர்கள் தமது வர்த்தகங்களை மீட்டெடுக்க வங்கிகளுடன் ஆக்கப்பூர்வமாக இணைந்து செயல்படும் வேளையில், இந்தக் கூற்றுக்கள் மிகைப்படுத்தப்பட்டனவாக திகழ்வதுடன் மட்டுமல்லாது, ஆபத்தான முறையில் எதிர்மறையானவை என்றும் இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

வங்கிகளுக்கு பராட்டே (Parate) நடவடிக்கையில் விரைந்து செயற்படும் எந்தவித நோக்கமும் இல்லை என்பதை ஏற்கனவே உள்ள மற்றும் சாத்தியமான கடன் பெறுநர்களுக்கு நாம் உறுதியளிக்க விரும்புகிறோம், என்று SLBA தெரிவித்துள்ளது. மேலும் தெரிவிக்கையில் உண்மை என்னவென்றால், கடன் பெற்றவர்களில் மிகச் சிறிய பகுதியினர் மட்டுமே பராட்டே (Parate) நடவடிக்கைகளுக்கு தகுதியுடையவர்களாக மாறுகிறார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் கடன்களை மறுசீரமைக்கவும் சொத்து விற்பனையைத் தவிர்க்கவும் தமது வங்கிகளின் உதவியைப் பெறுகிறார்கள். 

இது தொடர்பாக இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) மேலும் தெரிவிக்கையில், பராட்டே சட்டங்கள் இடைநிறுத்தப்படுவதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் அதாவது 2019 மற்றும் 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் - இலங்கையில் கடனை மீளச் செலுத்துவது மிகவும் சவாலான நிலைக்கு உட்பட்டதுடன் அறவிட முடியாத/ மீளச் செலுத்த முடியாத கடன்களில் 1% க்கும் குறைவானவை இறுதியில் பராட்டே நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன என்பதை சுட்டிக் காட்டியது. கடன் தீர்வுக்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தால், பராட்டே நடவடிக்கைகளுக்கு உட்படுத்துதல் நிச்சயமாக இறுதி முயற்சியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்தத் தரவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

வங்கிகளின் ஆக்ரோஷமான முதல் நடவடிக்கையாக பராட்டே சட்டங்களை பயன்படுத்துவதாக பொய்யாக சித்தரிக்க சில தரப்பினர் தவறான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இவ்வித பொய்யான முயற்சிகளினால் எவ்வித பயனும் இல்லை என்று SLBA மேலும் கூறியது. உண்மையில், பராட்டே சட்டங்கள் கடன் வழங்கும் வைப்பாளர்களின் நிதியைப் பாதுகாக்கவே உள்ளன, அவை தனிநபர்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME) ஆதரிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செயற்படுத்தப்படுகின்றன. வங்கிகள் தமது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், சட்டத்தை தவிர்த்து ஒத்துழைப்பு மூலம் கடன்களை மீட்டெடுக்கவுமே விரும்புகின்றன. 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வர்த்தகங்களை ஆதரிப்பதன் மூலம் வங்கித் துறை குறிப்பிடத்தக்க பொறுமை மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் காண்பித்துள்ளது என்று சங்கம் மேலும் குறிப்பிட்டது. இப்போதும் கூட, அனைத்து வங்கிகளும் நெருக்கடியில் உள்ள கடன் பெறுநர்கள் கடன்களை மறுசீரமைக்கவும், சாத்தியமான செயல்பாடுகளை மீண்டும் நிறுவவும் உதவுவதற்காக அர்ப்பணிப்புள்ள வர்த்தக மறுமலர்ச்சி பிரிவுகளை செயற்படுத்துகின்றன, மேலும் 2020 முதல் பாதகமான பொருளாதார நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட அளவீடுகளுக்கு அப்பாலுள்ள கடன் பெறுநர்களுடன் இணைந்தும் செயல்படுகின்றன என்று சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த வழிமுறைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, ஒரு சிறிய எண்ணிக்கையிலான கடன் பெறுநர்கள் அச்சத்தைத் தூண்டி, நிதி அமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைக்க முயல்வது மிகவும் வருந்தத்தக்கது என்றும் SLBA கூறியது. இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையையும், தமது கடமைகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ள உண்மையான கடன் பெறுனர்களின் வாய்ப்புக்களையும் குறைத்து மதிப்பிடும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. 

சிரமங்களை எதிர்கொள்ளும் அனைத்து கடன் பெறுநர்களும் தாமதமின்றி தமது வங்கிகளை அணுகி, வெளிப்படையான மற்றும் முன்னெச்சரிக்கையான முறையில் தீர்வுகளை பெற்றுக்கொள்ளுமாறும் நாம் கேட்டுக்கொள்கிறோம். 

வங்கி அமைப்பின் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மை என்பது வங்கியின் வைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பரந்த பொருளாதாரம், பொறுப்பான நடத்தை மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை சார்ந்துள்ளதை தவிர அச்சத்தை உருவாக்குவது அல்ல என்றும் இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) மேலும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05