விளையாட்டு
பங்களாதேஷ் அணிக்கு 133 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Jul 16, 2025 - 08:39 PM -

0

பங்களாதேஷ் அணிக்கு 133 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 133 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.  

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 46 ஓட்டங்களையும், தசுன் சானக்க 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.  

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மஹேடி ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்படி, 133 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாட உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05