மலையகம்
சோழன் உலக சாதனையை படைத்த மாணவி

Jul 17, 2025 - 10:50 AM -

0

சோழன் உலக சாதனையை படைத்த மாணவி

தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனையை மாணவி கன்சிகா படைத்துள்ளார்.

 

நுவரேலியா - கந்தப்பொல, ரிலாமுல்ல ஆரம்ப பாடசாலையில் 5 ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவி கன்சிகா தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறிய அதேவேளை, மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறினார்.

 

இவரது இந்த முயற்சியானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத் துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.

 

மாணவியின் முயற்சியை மிகவும் உன்னிப்பாக கண்காணித்த நடுவர்கள் அதை உலக சாதனையாக அங்கீகரித்தார்கள்.

 

சோழன் உலக சாதனை படைத்த மாணவி கன்சிகாவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், பேட்ச் மற்றும் பைல் போன்றவை நடுவர்கள் மற்றும் முதன்மை விருந்தினரான வலயக் கல்வி அலுவலக இயக்குநர் திசாநாயக, பாடசாலையின் தலைமை ஆசிரியர் விஜேந்திரன் போன்றோரினால் வழங்கிப் பாராட்டப்பட்டது.

 

சோழன் உலக சாதனை படைத்த மாணவியை வலயக் கல்வி அலுவலக இயக்குநரும்  மற்றும் பாடசாலையின் தலைமை ஆசிரியரும் வாழ்த்திச் சிறப்புரையாற்றினார்கள்.

 

சோழன் உலக சாதனை படைத்த மாணவியை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.
 

--

Comments
0

MOST READ