Jul 17, 2025 - 11:32 AM -
0
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (17) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த கார் வண்டியும், கொழும்பில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஓட்டுநர் உட்பட நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது கார் வண்டிக்கு பகுதியளவிலும், முச்சக்கர வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக எமதி செய்தியாளர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டியின் ஓட்டுநரின் தூக்க கலக்கம் தான் விபத்திற்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--