Jul 17, 2025 - 05:07 PM -
0
கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கிப் பிரிவானது அண்மையில் இலங்கை மத்திய வங்கி, வங்கியின் கிழக்கு பிராந்திய அலுவலகம் மற்றும் கல்முனை கிளை ஆகியவற்றின் அழைப்பின் பேரில், கல்முனையில் உள்ள கார்மல் பாத்திமா கல்லூரியின் 125வது ஆண்டு விழா கல்வி கண்காட்சியில் பங்கேற்றது. பிராந்தியத்தில் டிஜிட்டல் விழிப்புணர்வு மற்றும் நிதியியல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்க வங்கி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.
80க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து பதிவுசெய்யப்பட்ட 21,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்ப்பதாக அமைந்த இந்த நிகழ்வானது, கொமர்ஷல் வங்கியின் அதிநவீன டிஜிட்டல் வங்கி தீர்வுகளை காட்சிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாக செயல்பட்டது. இந்த நிகழ்வில் அமைக்கப்பட்ட கொமர்ஷல் வங்கி மினி டிஜி வலயத்தை, கொம்பேங்க் டிஜிட்டல் மற்றும் வங்கியின் டொட்கொம் சேமிப்புக் கணக்கின் செயல்விளக்கங்களை வழங்கியதுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளடக்கியதான பரந்த சமூகத்தை டிஜிட்டல் வங்கியின் சக்தி மற்றும் வசதியை எடுத்துக்காட்டும் நடைமுறை அனுபவங்களில் ஈடுபடுத்தியது.
வங்கியின் இந்த முயற்சிக்கிணங்க டிஜிட்டல் கல்வியறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் நவீன நிதியியல் நடைமுறைகள் குறித்து வங்கி பிரதிநிதிகள் விழிப்புணர்வு அமர்வுகளை நடத்தினர், இது டிஜிட்டல் ரீதியாக அதிகாரம் பெற்ற தலைமுறையை வளர்ப்பதற்கான வங்கியின் பரந்த நோக்கத்தை ஆதரிப்பதுடன் டிஜிட்டல் நிதியைப் பற்றிய அறிவூட்டல்களை வழங்கி, பாதுகாப்பான பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், பாதுகாப்பான, அணுகக்கூடிய வங்கி தீர்வுகளில் நீண்டகால வாடிக்கையாளர் நம்பிக்கையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த முயற்சியானது ஸ்மார்ட், பாதுகாப்பான நிதி எதிர்காலத்திற்கான கருவிகள் மற்றும் அறிவுடன் சமூகங்களை சித்தப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் டிஜிட்டல் மாற்றத்தை செயற்படுத்துவதற்கான கொமர்ஷல் வங்கியின் தொடர்ச்சியான நோக்கத்தை பிரதிபலிக்கிறது.
கண்காட்சியில் கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் தயாரிப்புகளின் செயல்விளக்கம் இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ளது.