Jul 17, 2025 - 06:59 PM -
0
ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகி அதன் பின் நாளைய மனிதன் என்ற படம் மூலமாக 1989 இல் அறிமுகம் ஆனவர் வேலு பிரபாகரன்.
அதிசய மனிதன், அசுரன், ராஜாளி, காதல் கதை போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் அவர் 60 வயதில் தன்னை விட பாதி வயது இருக்கும் நடிகையை இரண்டாவது திருமணம் செய்ததும் சர்ச்சையாக பேசப்பட்டது.
வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (17) மதியம் அவர் காலமானார்.
அவரது மரணத்திற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.