Jul 18, 2025 - 11:46 AM -
0
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
45 வயதான நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சம்பவத்தின் போது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராக்களில் பதிவான காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.