Jul 18, 2025 - 12:57 PM -
0
பின்தங்கிய பிரதேசங்களில் மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்கதொரு முயற்சியாக, ஜுன் 27 அன்று வடமேல் மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் பண்டாரநாயக்க மாதிரி ஆரம்ப பாடசாலை மற்றும் ஸாஹிரா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்ற விசேட வைபவங்களின் போது மின்சாரத்தால் இயங்கும் 100 க்கும் மேற்பட்ட சைக்கிள்களை கிராமப்புற பாடசாலை மாணவர்களிடம் ஹட்ச் உத்தியோகபூர்வமாகக் கையளித்து வைத்துள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் அறிவிக்கப்பட்டவாறு, ஹட்ச் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியின் நடைமுறைக் கட்டத்தை இந்த நிகழ்வு குறித்து நிற்கின்றது.
பின்தங்கிய பிரதேசங்களின் போக்குவரத்து தேவைகளுக்கு மாணவர்கள் முகங்கொடுத்து வருகின்ற சவால்களுக்கு நேரடி தீர்வை வழங்கி, அவர்கள் பாதுகாப்பாகவும், திறன்மிக்க வழியிலும் பாடசாலைக்கு சென்று வருவதற்கு அவர்களுக்கு உதவும் வகையில் இச்செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரப் போக்குவரத்தில் காணப்படும் அன்றாட சுமையைக் குறைத்து, பாடசாலைக்கு தொடர்ச்சியாகச் சமூமளித்து, கல்வியை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, குறிப்பாக நாட்டில் புவியியல்ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு உதவுவதே ஹட்ச் நிறுவனத்தின் நோக்கம்.
கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள், ஹட்ச் முகாமைத்துவ அணி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் உள்ளூர் சமூகத்தினர் இவ்வைபங்களில் கலந்து சிறப்பித்துள்ளதுடன், அடிமட்டத்தில் இந்த முயற்சி தோற்றுவிக்கும் அர்த்தமுள்ள பலன் குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டனர்.
ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறுவன விவகாரங்களுக்கான பொது முகாமையாளர் மங்கள பண்டார அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “மாணவர்கள் வாழ்கின்ற பிரதேச வேறுபாடின்றி, அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்புக்களுக்கு இடமளிக்க வேண்டும் என்ற எமது ஆழமான அர்ப்பணிப்பை இம்முயற்சி பிரதிபலிக்கிறது. இப்பங்களிப்பினூடாக, கிராமப்புற மாணவர்களின் அன்றாட சவால்களை இலகுபடுத்துவது மாத்திரமன்றி, இலங்கையில் கல்விக்கு இன்னும் கூடுதலான அளவில் நிலைபேற்றியல் கொண்ட மற்றும் அனைவரையும் அரவணைக்கின்ற எதிர்காலத்திற்கு ஹட்ச் வழிவகுத்து வருகிறது. கல்வி அமைச்சுடன் இணைந்து வளர்ச்சிக்கான பங்காளராகச் செயற்படுவதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், சிறுவர்களின் கல்வி உரிமைக்கு தடையாகவுள்ள யதார்த்த உலகின் முட்டுக்கட்டைகளை அகற்றுவதில் நாம் ஒன்றுபட்டு உழைத்து வருகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
கல்வி, சுற்றுச்சூழல் நிலைபேற்றியல், மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை வலுவாக வலியுறுத்துகின்ற ஹட்ச் நிறுவனத்தின் பரந்தளவிலான நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நோக்கத்தின் ஒரு அங்கமாக இப்பங்களிப்பு காணப்படுகின்றது. கிராமப்புற கல்விக் கட்டமைப்பில் சூழல்நேய போக்குவரத்து முறைமைகளை ஒருங்கிணைப்பதனூடாக, தனது பிரதான வர்த்தக எல்லைகளுக்கும் அப்பால் பரிணாம மாற்றத்தை முன்னெடுத்து, இணைக்கப்பட்ட மற்றும் வலுவூட்டப்பட்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதில் தனது அர்ப்பணிப்பை ஹட்ச் தொடர்ந்தும் காண்பித்து வருகிறது.
ஹட்ச் ஸ்ரீலங்கா தொடர்பான விபரங்கள்
ஹொங்கொங் நாட்டைத் தளமாகக் கொண்ட Fortune 500 நிறுவனங்கள் குழுமமான CK Hutchison Holdings (CKHH) இன் துணை நிறுவனமான ஹட்ச் ஸ்ரீலங்கா, இலங்கையில் தொலைதொடர்பாடல் துறையில் முக்கியமான செயல்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுவதுடன், தொலைதொடர்பாடல் உள்ளடங்கலாக ஆறு பாரிய துறைகளில் செயல்பட்டுவருவதுடன், 2023 ம் ஆண்டில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை CKHH பதிவாக்கியுள்ளது.
1997 ம் ஆண்டில் இலங்கை சந்தையில் காலடியெடுத்து வைத்த ஹட்ச், 2004 ம் ஆண்டில் GSM சேவையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, 2011 இல் 3G மற்றும் 2018 இல் 4G என தனது சேவைகளை படிப்படியாக விஸ்தரித்தது. 2019 இல் எடிசலாட் ஸ்ரீலங்கா (Etisalat Sri Lanka) நிறுவனத்தை கொள்முதல் செய்தமை ஹட்ச்சின் சந்தை ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், 078 மற்றும் 072 என ஆரம்பிக்கும் தொலைபேசி இணைப்பு இலக்கங்களுக்கு சிக்கனமான கட்டணங்களுடன், நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு இடமளித்துள்ளது. ஹட்ச்சின் 4G வலையமைப்பு இலங்கை சனத்தொகையில் 95% ஐ உள்ளடக்கியுள்ளதுடன், தேசத்தின் டிஜிட்டல் அபிலாஷைகளை அடைவதற்கு உதவும் வகையில் 5G சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்நிறுவனம் தயாராக உள்ளது.
சிக்கனமான கட்டணங்களுடன், நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் கூட தொடர்பாடல், வணிக செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மேம்படுத்துகின்ற வாய்ப்பைப் பெறும் வகையில் நம்பகமான இணைப்புத்திறனை வழங்கி, தனது சேவைகளை ஹட்ச் விரிவுபடுத்தி வருகின்றது.