Jul 18, 2025 - 01:01 PM -
0
HNB பொதுக் காப்புறுதியானது கொழும்பு லீடர்சிப் அகாடமியினால் ஒழுங்கமைக்கப்பட்ட, பெருமைமிகு சிறந்த முகாமையாளர் விருதுகள் 2024 இல் அதனது இரு சிரேஸ்ட முகாமையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருக்க தனித்துவமான தலைமைத்துவத்தினை வளர்த்தெடுப்பதிலான அதனது புகழை தொடர்ந்தும் ஸ்திரப்படுத்தியுள்ளது.
தங்களது தனிச்சிறப்பான தலைமைத்தும் மற்றும் மக்கள் முகாமைத்துவ திறன்களுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள, முகவரக அலைவரிசை தலைவர் ருவான் வீரசிங்க, மற்றும் உதவி பிராந்திய முகாமையாளர் (வடமேல்) சுரங்க ரோசா ஆகியோர் சமீபத்தில் நிறைவுற்ற விருது விழாவில் சிறந்த முகாமையாளர்களாக பெயரிடப்பட்டனர். இவ்வங்கீகாரமானது HNBGI இன் வெற்றிக்கான அவர்களது தனிப்பட்ட பங்களிப்பினை மாத்திரமின்றி, திறன்களை வளப்படுத்துவதிலும், அணிகளை வலுப்படுத்துவதிலும், மற்றும் பெறுபேறுகளை முற்செலுத்துவதிலுமான கம்பெனியின் பரந்த கலாச்சாரத்தினையும் பிரதிபலிக்கின்றது.
கொழும்பு லீடர்சிப் அகடமியினால் வருடாந்தம் ஒழுங்கமைக்கப்படும், சிறந்த முகாமையாளர் விருதுகள் நிகழ்ச்சியானது செயற்பாடுகளை ஆகர்சிக்கின்ற, ஒத்திசைவான அணிகளை கட்டமைக்கின்ற, மற்றும் நிறுவனத்தின் நோக்கினை நிறைவேற்றுவதுடன் ஒருங்கிணைகின்ற தலைவர்களை அடையாளப்படுத்தி, இலங்கை முழுதுமான முகாமைத்துவ மேன்மைகளை கொண்டாடுகின்றது. CLA Coaching & Consulting Inc. உடனான மூலோபாய பங்குடைமையின் ஊடாக இத்துவக்கமானது தலைமைத்துவ வினைத்திறன் மற்றும் திறன் அபிவிருத்திக்கான ஒரு தேசிய அடையாளத்தினை கட்டமைக்கின்றது.
இவ்வங்கீகாரம் குறித்து கருத்துரைக்கையில், HNB பொதுக் காப்புறுதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதுமின ஜெயசுந்தர அவர்கள், ருவான் மற்றும் சுரங்க ஆகியோரின் அவர்களுக்கு உரித்தான இந்த கௌரவம் குறித்து நாங்கள் மிகவும் பெருமையடைகின்றோம். HNBGI இல், சிறப்பான தலைமைத்துவம், சிறந்த வாடிக்கையாளர் சேவை, புத்தாக்கம், மற்றும் நீண்ட கால வெற்றி என்பவற்றின் அடித்தளம் என நாம் நம்பிக்கைகொண்டுள்ளோம். இவ்வங்கீகாரமானது எமது தலைமைத்துவ அணியின் வளத்தினை பிரதிபலிப்பது மாத்திரமின்றி நிறுவனத்தின் அனைத்து மட்டங்களிலும் அதிசிறப்பானவற்றை வளர்ப்பதற்கான எமது நடைமுறை அர்ப்பணிப்பினையும் வெளிப்படுத்துகின்றது என்றார்.
இச்சமீபத்திய பாராட்டானது LMD இனால் தரப்படுத்தப்பட்டவாறு. 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் அதிக விருதுபெற்ற பொதுக் காப்புறுதி கம்பெனியெனும் HNBGI இன் சமகால அங்கீகாரத்தினை கொணர்ந்துள்ளதுடன், ‘A(lka)’ எனும் பிட்ச் கடன் தரப்படுத்தலிலான அதனது தரமுயர்வானது, கம்பெனியின் நிதி ஸ்திரம், செயற்பாட்டு நெகிழ்திறம் மற்றும் சந்தை தலைமைத்துவத்தினையும் குறித்து நிற்கின்றது. மோட்டார், மருத்துவ, வீடு, தீ, கடல், போக்குவரத்து, மற்றும் பொறியியல் காப்புறுதி என்பவற்றை உள்ளடக்குவதும், அதேப்போல பயிர்களுக்கான அளவைதள காப்புறுதி போன்ற முன்னோடித் தீர்வுகள் போன்ற பொருத்தமான திட்டங்களுடன் HNBGI புத்தாக்கத்திலும் வாடிக்கையாளர் வளப்படுத்தலிலும் அர்ப்பணிப்புமிக்கதாக காணப்படுகின்றது.
2027 ஆம் ஆண்டளவில் இலங்கையின் அதிக வாடிக்கையாளர் மைய பொதுக் காப்புறுதி வழங்குநராக மாறுவதற்கான தன்னுடைய குறிக்கோளினை நோக்கி பணியாற்றும் HNB பொதுக் காப்புறுதியானது நிலைபேறாக்கப்பட்ட வளர்ச்சி, பங்குடைமையாளர் நம்பிக்கையை மீளப்பெறல் மற்றும் எதிர்காலத்திற்கு தயாரான நிறுவனமொன்றை கட்டமைத்தல் என்பவற்றை நடாத்தக்கூடியதான மக்கள், செயன்முறைகள், மற்றும் உற்பத்திகளில் தொடர்ந்தும் முதலிடுகின்றது.