Jul 30, 2025 - 12:55 PM -
0
NDB வங்கியானது அண்மையில் அவிசாவளையில் கவனத்தை ஈர்க்கும் டிஜிட்டல் மாற்றத்திற்கான மன்றம் ஒன்றை நடத்தியதன் மூலம் நாடு முழுவதும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்வாண்மைக்கான [SME] ஈடுபாட்டு முயற்சிகளைத் தொடர்ந்தது. பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு SME வர்த்தக வங்கி வாடிக்கையாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வானது, இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறையை வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் மூலம் - குறிப்பாக NEOSBIZ செயலி மூலம் வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான NDB இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் ஒரு தளமாக செயல்பட்டது.
அவிசாவளையில் நடைபெற்ற இந்த மன்றமானது SMEயினருக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட NDB இன் முன்னோடி மொபைல் வங்கி தளமான NEOSBIZ ஐ முன்னிலைப்படுத்தியது, மேலும் நிதியியல் செயல்திறன், பரிவர்த்தனை பாதுகாப்பு மற்றும் தடையற்ற வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள்வதில் அதன் சக்திவாய்ந்த திறன்களை நிரூபித்தது. இந்த நிகழ்வில் பங்கேற்பாளர்களுக்கு செயலியை நேரடியாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, இது வர்த்தக உரிமையாளர்களுக்கு மொத்தமாக பணம் செலுத்துதல் முதல் ஊழியர்களுக்கான சம்பளம், QR பரிவர்த்தனைகள் மற்றும் நிகழ்நேர நிதி கண்காணிப்பு வரை அனைத்தையும் ஒரே உள்ளுணர்வு தளத்தின் மூலம் நிர்வகிக்க எவ்வாறு அதிகாரம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
NDB வங்கியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கியதுடன் SME அபிவிருத்தியில் வங்கியின் நீண்டகால கவனம் மற்றும் நீண்டகால மீள்தன்மை மற்றும் அளவிடுதலை உறுதி செய்வதில் டிஜிட்டல் மயமாக்கலின் வளர்ந்து வரும் முக்கியத்துவம் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் அதிகரித்து வரும் போட்டி சூழலில் பணிகளை ஒழுங்குபடுத்தவும், செயல்திறனைக் கண்காணிக்கவும், நிகழ்நேர முடிவெடுப்பதை ஏற்றுக்கொள்ளவும் வர்த்தகங்கள் NEOSBIZ ஐ எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் இந்த அமர்வுகளில் ஆராயப்பட்டது.
அவிசாவளையில் நடைபெற்ற இந்த மன்ற கூட்டமானது சமீபத்திய நிதியியல் கருவிகளை அணுகுவதன் மூலம் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக NDB வங்கியால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் இதேபோன்ற நிகழ்வுகளின் தொடரை பின்பற்றுவதாக அமைந்திருந்தது. இந்த பிராந்திய செயல்பாடுகள் SME யினரை டிஜிட்டல் சகாப்தத்தில் விருத்தி பெறும்வகையில் கற்பிக்கவும், ஈடுபடவும், சித்தப்படுத்தவும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது பாரம்பரிய காகித அடிப்படையிலான முறைமைகளில் இருந்து விலகி, வேகமான, பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய வங்கி முறைமைகளைத் தழுவ உதவுகிறது.
NDB வங்கியானது இலங்கையின் SME சுற்றுச்சூழல் முறைமையில் ஒரு முக்கிய பங்குதாரராக, நாடு முழுவதும் உள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு நிதியியல் உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் ரீதியாக செயல்படுத்தப்பட்ட வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான அதன் நோக்கத்தில் உறுதியாக உள்ளது. NEOSBIZ மற்றும் அதன் SME-மையப்படுத்தப்பட்ட சேவைகளின் பரந்த தொகுப்பு மூலம், வங்கி தொடர்ந்து லட்சியத்திற்கும் அணுகலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, இலங்கையின் பொருளாதாரத்திற்கு நீடித்த பெறுமதியை வழங்குகிறது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.