Jul 30, 2025 - 01:04 PM -
0
செலான் வங்கி, நாட்டின் மிகப்பெரிய திருமணக் கண்காட்சியான The Wedding Show 2025இல் தனது நீண்டகால MEGA REWARDS வாடிக்கையாளர்கள் சிலரை அண்மையில் கௌரவித்தது. The Wedding Show 2025இன் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளரான அன்புடன் அரவணைக்கும் வங்கிக்கு நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் தகுதியான வாடிக்கையாளர்களை அவர்களின் நீண்டகால விசுவாசத்திற்காக கௌரவிப்பதற்கான சரியான சந்தர்ப்பத்தை இந்நிகழ்வு வழங்கியது.
வாடிக்கையாளர்களின் கணக்கு இருப்பின் அடிப்படையில், அவர்களின் வாழ்க்கையின் முக்கிய தருணங்களைக் கொண்டாடும் வகையில் உறுதியான வெகுமதிகளை வழங்கும் ஒரே வங்கி வெகுமதித் திட்டமாக MEGA REWARDS உள்ளது. செலான் வங்கியின் தகுதியான நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படும் MEGA REWARDS, திருமணங்கள், திருமண ஆண்டுவிழாக்கள், பிரசவம், பிறந்தநாள், மருத்துவமனை அனுமதி மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்றவற்றிற்கு பணத் தொகையை வழங்குகிறது.
விசுவாசத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் கிராண்ட்பாஸ் கிளையைச் சேர்ந்த Ms. விஷ்வனி பியூமந்தி மற்றும் கொட்டாஞ்சேனை கிளையைச் சேர்ந்த Ms. N. ஸ்ரீகாந்த் ஆகியோர் அடங்குவர். அவர்கள் இருவரும் தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் சிறந்து பெறுபேறுகளை பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டனர். Ms. விஷ்வனி பியூமந்தியின் வெகுமதியை, அவர் சார்பாக அவரது தந்தை திரு.D.D.நிஷாந்த பெற்றுக் கொண்டார். மேலும், கொட்டாஞ்சேனை கிளையைச் சேர்ந்த Ms.T.புவனேஸ்வரி தனது அறுவை சிகிச்சைக்கான பணத்தொகையைப் பெற்றார். மேலும் கொள்ளுப்பிட்டி கிளையைச் சேர்ந்த Ms.நிஷானா பெர்னாண்டோ நட்சத்திர விடுதி பக்கேஜுக்கு தகுதி பெற்றார். இந்த வாடிக்கையாளர்கள், MEGA REWARDSஇற்கான தகுதிகளை பூர்த்தி செய்து, The Wedding Show 2025யில் தமது வாழ்வின் முக்கியமான தனிப்பட்ட சாதனைகளிற்காக அங்கீகரிக்கப்பட்டு வெகுமதிகளைப் பெற்றனர். இந் நிகழ்வு வாடிக்கையாளர்களின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியானதும் மனதிற்கு நெருக்கமான தருணமாகவும் இருந்தது.
இந் நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, “செலான் வங்கியின் பயணம் முழுவதும் எங்களுடன் இருந்த வாடிக்கையாளர்களைக் கொண்டாட MEGA REWARDS எங்களிற்கு வாய்ப்பளிக்கிறது. 2007ஆம் ஆண்டு முதல் ஒரு வங்கியால் செயற்படுத்தப்படும் மிக நீண்ட கால விசுவாசத் திட்டமான MEGA REWARDS, எங்கள் வாடிக்கையாளர்களின் விசுவாசத்தை கௌரவப்படுத்த எமக்கு கிடைத்த சந்தர்ப்பமாகும். எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒரு அருமையான தருணத்தைக் கொண்டாட ஒரு அற்புதமான பின்னணியை The Wedding Show எங்களுக்கு அளித்தது. என்றார்.
செலான் MEGA REWARDS பற்றிய மேலதிக தகவலுக்கு, 011-200 88 88 என்ற விசேட இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.