Jul 30, 2025 - 01:48 PM -
0
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் கலை வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜ். 2019ம் ஆண்டு தமிழில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டா ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
சில பயணம் அமைதியாக தொடங்கி, நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு செல்லும். அதேபோலதான் நாங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவன் - மனைவியாக அன்போடும், ஒருமித்த மனதோடும் எங்களது பயணத்தை தொடங்கினோம்.
இந்த ஆண்டு ஆழமான காதலோடு எங்களின் குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அப்போ விவாகரத்து எப்போ கிடைத்தது என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள்.