Jul 30, 2025 - 02:23 PM -
0
ஹதரலியத்த - ரம்புக்கனை வீதியில் 12வது மைல்கல் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹதரலியத்த திசை நோக்கி பயணித்த லொறி ஒன்று, முச்சக்கர வண்டியுடன் மோதி நேற்று (29) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பின்னர் லொறியின் சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வண்டியின் மீதும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி மற்றும் இரண்டு உதவியாளர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கெப் வண்டியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் காயமடைந்து ஹதரலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் 52 மற்றும் 63 வயதான லொறியின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
லொறியின் உதவியாளர்கள் இருவரும், கெப் வண்டியின் சாரதியும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சடலங்கள் தற்போது ஹதரலியத்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹதரலியத்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.