செய்திகள்
இராணுவ தளபதியின் சேவைக் காலம் நீடிப்பு

Jul 30, 2025 - 04:39 PM -

0

இராணுவ தளபதியின் சேவைக் காலம் நீடிப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மேலும் ஒரு வருட கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொடரிகோ கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 

அனுபவமிக்க இராணுவ அதிகாரியான, லெப்டினன் ஜெனரல் ரொட்ரிகோ முன்னர் இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக பணியாற்றியுள்ளார். அத்துடன் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் செயற்பட்டுள்ளார். 

கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1989 ஜனவரி 20 ஆம் திகதி இராணுவத்தில் கேடட் அதிகாரியாக இணைந்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05