செய்திகள்
இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

Jul 30, 2025 - 05:20 PM -

0

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச 90 நாள்  on-arrival சுற்றுலா விசாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

 

இந்த விசாக்கள் வழங்குவது 2025  ஜூலை 29 முதல் அமுலுக்கு வருவதோடு, இந்த விசாக்களைப் பெறுவதற்கு, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருத்தல் மற்றும் மாலைதீவில் தங்கியிருக்கும் காலத்தில் தமது செலவுகளை ஈடுகட்ட போதுமான பணம் தங்களிடம் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.

 

மாலைதீவு குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான விசா வசதி வழங்கல் ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் மாலைதீவின் குடிவரவு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு இந்த விசா வசதி வழங்கப்படுகிறது என்று மாலைதீவு அரசாங்கம் தெரிவிக்கிறது. 

 

இதன் ஊடாக தமது அரசாங்கம் இலங்கைக்கு அளிக்கும் உயர் முன்னுரிமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று மாலைதீவு அரசாங்கம் மேலும் தெரிவிக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05