Jul 30, 2025 - 05:53 PM -
0
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ் மற்றும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர் கான் என ஒரு நட்சித்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி கூலி வெளிவரவுள்ள நிலையில், ரசிகர்கள் இப்படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கூலி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் USA-வில் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கிவிட்டது. அதன்படி, இப்படம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.