Jul 30, 2025 - 06:14 PM -
0
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கடன் மோசடி வழக்கில் டெல்லி பொளாதார குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பவர் ஸ்டார் சீனிவாசன் 5 கோடி ரூபா பணத்தை படத் தயாரிப்பு மற்றும் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீனிவாசன் 2018 முதல் தலைமறைவாக இருந்த நிலையில் காவல்துறை கைது செய்துள்ளது.
ரூ.1,000 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கில் பொலிஸார் சற்றி வளைத்துள்ளனர்.
சென்னையில் இதேபோல் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.