Jul 30, 2025 - 06:27 PM -
0
இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (31) ஆரம்பமாகிறது.
இந்நிலையில் 5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியை ஒல்லி போப் வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சரும் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமானது.