Aug 6, 2025 - 12:32 PM -
0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில், நேற்று (05) இரவு 8 மணியளவில், போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், 2 கிராம் 330 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 45 வயது பெண் வியாபாரியை கைது செய்தனர்.
மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய, பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட பெண் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--