வடக்கு
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Aug 6, 2025 - 03:49 PM -

0

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

A9 வீதி கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக நேற்று (05) இரவு 8.30மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான கப்ரக வாகனம் வீதியை கடக்க முற்பட்டவர் மீது மோதியதியதிலேயே  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

விபத்தில் 55 வயதான திருகோணமலையைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

--

Comments
0

MOST READ