Aug 6, 2025 - 05:56 PM -
0
இந்தியாவின் கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொசகோப்பலு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது ப்ரீத்தி என்ற இரண்டு குழந்தைகளின் தாய், ஆன்லைனில் பழகிய ஒரு வாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளியான புனித், கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள கரோதி கிராமத்தைச் சேர்ந்தவர். ப்ரீத்தியின் கணவர் சுந்தரேஷ் ஆட்டோ ஓட்டுநராகவும், ப்ரீத்தி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவராகவும் இருந்தார்.
ப்ரீத்தி புனித்துக்கு பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கை அனுப்பினார். இருவரும் அன்று இரவு முழுவதும் ஆன்லைனில் பேசினர். பிறகு ப்ரீத்தி தனது தொலைபேசி எண்ணைப் பகிர்ந்து, புனித்திடம் அழைப்பு ஒன்றை அனுப்புமாறு கேட்டார்.
பின்னர் இருவரும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடினர். ப்ரீத்தி புனித்திடம் காதல் தெரிவித்து, பணம் தருவதாகவும், ஹாசனில் சந்திக்க அழைத்தார்.
புனித் தனது நண்பரிடமிருந்து கடன் வாங்கிய காரில் ஹாசனுக்கு சென்றார். ப்ரீத்தி, தனது நண்பரின் மகளின் சடங்கில் கலந்து கொள்வதாக வீட்டில் கூறிவிட்டு, புனித்தை சந்தித்தார். இருவரும் கே.ஆர்.எஸ். பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.
பின்னர், ப்ரீத்தி மீண்டும் நேரம் செலவிட விரும்பினார், ஆனால் புனித் மறுத்து, அவரை ஹாசன் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால், ப்ரீத்தி கே.ஆர்.பேட்டை பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.
கே.ஆர்.பேட்டை சுற்றுவட்டாரத்தில், ப்ரீத்தி தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். புனித் அவளை கட்டரகட்டா காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
நான் திருப்தி அடையவில்லை, என்னை திருப்தி படுத்து என மீண்டும் உறவில் ஈடுபட சொல்லி வலியுறுத்தியுள்ளார் ப்ரீத்தி, புனித் மறுத்தார், ஏனெனில் கிராமவாசிகள் பார்க்க வாய்ப்புள்ளது என்று கூறினார். இதனால், ப்ரீத்தி அவரது ஆண்மையை கேலி செய்து மோசமான கெட்ட வார்த்தையில் அவரை திட்டி கிண்டல் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த புனித், அவரை காரில் அடித்தார்.
ப்ரீத்தி தரையில் விழுந்து ரத்தம் வடிய, பயந்து போன புனித், அவர் தனது பெயரை வெளியிடுவார் என்ற அச்சத்தில், கல்லால் அவரது தலையை நொறுக்கி, பின்னர் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்தார். பின்னர், உடலை தனது விவசாய நிலத்தில் கொண்டு சென்று, தென்னை ஓலையால் மறைத்து வைத்தார்.
ப்ரீத்தி வீடு திரும்பாததால், அவரது கணவர் சுந்தரேஷ் ஜூன் 23 ஆம் திகதி ஹாசன் எக்ஸ்டென்ஷன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ப்ரீத்தியின் தொலைபேசி கே.ஆர்.பேட்டை பகுதியில் செயல்பட்டதை கண்டறிந்த பொலிஸார், புனித்தை தொடர்பு கொண்டபோது, அவர் ப்ரீத்தி தனது காரில் தொலைபேசியை விட்டுவிட்டு பேருந்தில் சென்றதாக கூறினார்.
இதற்கிடையில், கரோதி கிராமவாசிகள் ஒரு பெண்ணின் உடல் கிடைத்ததாக தகவல் அளித்தனர்.
விசாரணையில், அது ப்ரீத்தி என்று உறுதியானது. மாண்டியா காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன் பாலதண்டி, புனித் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார்.