விளையாட்டு
ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் சுப்மன் கில்

Aug 6, 2025 - 06:02 PM -

0

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் சுப்மன் கில்

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) கௌரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய தலா 3 வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது. 

அதன்படி, ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், தென்னாபிரிக்காவின் வியான் முல்டர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இங்கிலாந்து, இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதைத் தொடர்ந்து பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05