Aug 6, 2025 - 09:44 PM -
0
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் திகதி வெளியாக இருந்த நிலையில் பட வௌியீட்டை படக்குழு தள்ளிவைத்தது.
இந்நிலையில், காதி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.