உலகம்
புதிய நாட்டை உருவாக்கி அதன் ஜனாதிபதியான 20 வயது இளைஞர்!

Aug 7, 2025 - 06:12 AM -

0

புதிய நாட்டை உருவாக்கி அதன் ஜனாதிபதியான 20 வயது இளைஞர்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், 'வெர்டிஸ்' என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதன் ஜனாதிபதியாகியுள்ளார். 

குரோஷியா மற்றும் செர்பியாவுக்கு இடையில், டானூப் நதிக்கரையில் அமைந்துள்ள 125 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், "வெர்டிஸ் குடியரசு" என்ற புதிய நாட்டை டேனியல் ஜாக்சன் என்ற அந்த 20 வயது அவுஸ்திரேலிய இளைஞர் உருவாக்கி, தன்னை அதன் ஜனாதிபதியாக அறிவித்துள்ளார். 

இந்த நிலப்பகுதிக்கு எந்த நாடும் உரிமை கோரவில்லை என்பதை அறிந்து, 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி இந்த மைக்ரோநேஷனை (micronation) அவர் உருவாக்கினார். இந்த புதிய நாட்டிற்கு தனிக் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்கள் உள்ளனர். 

குரோஷிய அதிகாரிகள், ஜாக்சன் மற்றும் அவரது குடிமக்களை அக்டோபர் 2023 இல் கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற்றி, வாழ்நாள் தடை விதித்தனர். 

ஆனால், செர்பிய அதிகாரிகள் தனது முயற்சிக்கு ஆதரவாக இருப்பதாக ஜாக்சன் கூறுகிறார். அவர் தற்போது நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05