Aug 7, 2025 - 11:01 AM -
0
ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'பேய் கதை'.
போபோ சசி இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் 29ம் திகதி திரைக்கு வரவுள்ளது.
பலர் பேய்கதை எடுத்து இருக்கிறார்கள். இது தலைப்பே பேய் கதையா? என்ன ஸ்பெஷல் என தேடிப் பார்த்தால் ''இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படம்.
திரில்லர், காமெடி, சஸ்பென்ஸ் வகை படங்களில் ரத்தம், வன்முறை ஆகியவை இருக்கும்.
ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.
அவர்களுக்கும் இது ஒரு த்ரில்லிங்கான தருணமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம்.
கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதனை விவரிக்கும் வகையிலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம்.
திரையரங்க அனுபவத்திற்காக பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம்.
படத்தில் எட்டு நிமிட அளவிற்கு விஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். பல குழந்தைகள் அதை இப்போது பயன்படுத்தி வருகிறார்கள்.
பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இல்லாத பேய் கதை இது'' என்கிறார்.