Aug 7, 2025 - 11:09 AM -
0
புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது விளங்கும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர உற்சவ நிகழ்வான தீ மிதிப்பு விழா நேற்று (06) புதன்கிழமை இரவு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குமார பஞ்சாட்சர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.
உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 நாட்கள் உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில், ஆலய முற்றவெளியில் இருந்து நேற்று இரவு 7 மணி அளவில் கரகம் புறப்பட்டு ஆண்டிமுனை வரை வெளி வீதி வலம் வந்து, இரவு 8.30 மணி அளவில் தீ மிதிப்பு உற்சவம் 'அரோஹரா' நாமத்துடன் ஒலிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதிப்பில் பக்தி பூர்வமாக இறங்கி தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
இதேவேளை, நேற்றைய தீ மதிப்பு விழாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
--