Aug 7, 2025 - 12:24 PM -
0
சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் தலைவர் டொம் லதம் விலகியுள்ளார்.
இடது தோல் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"டொம் லதமை மீண்டும் இழந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது," என ரொப் வால்டர் கூறியுள்ளார்.
அவர் கடினமாக உழைத்து வருகிறார், இரண்டாவது டெஸ்டுக்கு நன்றாக தம்மை கண்காணித்து வந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று அவரால் உடற்பயிற்சி சோதனைகளில் தேர்ச்சி பெற முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மிட்செல் சாண்ட்னர் தொடர்ந்தும் அணியை வழிநடத்தவுள்ளார்.
டொம் லதமுக்கு பதிலாக நியூசிலாந்து அணியில் பெவோன் ஜேக்கப்ஸ் (Bevon Jacobs) இணைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.