உலகம்
பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் வழங்கும் இந்தோனேசியா!

Aug 7, 2025 - 01:46 PM -

0

பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் வழங்கும் இந்தோனேசியா!

இந்தோனேசியா, காசாவிலிருந்து காயமடைந்த 2,000 பாலஸ்தீனியர்களுக்கு, தமது மக்கள் வசிக்காத தீவுகள் ஒன்றில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அப்பால், சிங்கப்பூரின் தெற்கே உள்ள கலாங் தீவில் இந்த வசதியை பெறமுடியும் என இந்தோனேசிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஹசன் நஸ்பி, தெரிவித்துள்ளார். 

நோயாளிகள் குணமடைந்த பிறகு காசாவிற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும் இது நிரந்தர குடியேற்றம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார். 

காயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் அளிக்க ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ முன்வந்தது, காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக வெளியேற்ற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரிந்துரையுடன் ஒத்திசைவதாக இந்தோனேசியாவின் உயர் மதகுருமார்கள் சில மாதங்களுக்கு முன்னர் விமர்சனங்களை வௌியிட்டனர். 

இதன் பின்னனியிலேயே குறித்த அறிவிப்பும் வௌியாகியுள்ளது. 

எனினும் இதற்கு பதில் வழங்கிய இந்தோனேசிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர், பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் எந்தவொரு முயற்சியையும் தாம் கடுமையாக எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05