Aug 7, 2025 - 02:59 PM -
0
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால், இஸ்ரேலுடனான ஆயுத வர்த்தகத்தை நிறுத்த அல்லது குறைக்க வேண்டும் என ஐந்து பிரதான நாடுகளின் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரேசில், கொலம்பியா, கிரீஸ், தென்னாபிரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் போல்பிஷ் தளத்தினால் கடந்த மாதம் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
குறித்த கருத்துக் கணிப்பின் தகவல்கள் இன்றைய தினம் வௌியாகியுள்ளது.
அதில், இஸ்ரேலுடனான ஆயுத ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஸ்பெயின் அதிக ஆதரவைக் காட்டியுள்ளது.
பதிலளித்தவர்களில் 58 சதவீதம் பேர் அவற்றை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கிரீஸ் மக்களில் 57 சதவீதமானோரும், கொலம்பியாவில் 52 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில், பதிலளித்தவர்களில் 37 சதவீதம் பேர் ஆயுத நிறுவனங்கள், இஸ்ரேலுக்கான விற்பனையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும், 22 சதவீதம் பேர் அவற்றைக் குறைக்க வேண்டும் என்றும் கருத்து வௌியிட்டுள்ளனர்.
அத்துடன் தென்னாப்பிரிக்காவில், நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இஸ்ரேலுடனான ஆயுத ஒப்பந்தங்கள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என 46 சதவீதமானோரும், அதனை குறைக்க வேண்டும் என 20 சதவீதமானோரும் குறிப்பிட்டுள்ளனர்.