Aug 7, 2025 - 03:38 PM -
0
இன்று (07) காலை ரஜவெல பகுதியில் இருந்து ஹெத்கால நகரில் உள்ள பாடசாலைக்கு பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த அக்காவும் தம்பியும் விபத்தில் சிக்கினர்.
இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு லொறி தம்பி மீது மோதியதில் எட்டு வயது சிறுவனான தம்பி பலத்த காயங்களுடன் சுயநினைவு இழந்து கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த விபத்தானது லொறி பள்ளத்தில் புரண்டு விபத்துக்குள்ளாகியது. காயமடைந்த சிறுவனும் லொறி சாரதியும் தற்போது கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹெத்கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--