Aug 7, 2025 - 04:57 PM -
0
கொழும்பு மாநகரின், புறக்கோட்டையம்பதியின் சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வரலாற்று பெருமைமிக்க ஆடிவேல் திருவிழா இன்று (07) வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதன்போது, ஆடிவேல் விழா தேர்பவனியின் பூஜை வழிபாட்டு நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் வழிபாட்டு நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதி செயலாளர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வழிபாட்டு நிகழ்விலும் கலந்து கொண்டார்.
--