Aug 7, 2025 - 05:51 PM -
0
கிளிநொச்சி - புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகில், அதிகளவான துப்பாக்கி ரவைகள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளன
சந்தேகத்திற்கிடமாக ,அதிகளவான தோட்டாக்கள், சிதறி காணப்பட்ட நிலையில், அதனை அவதானித்த பாடசாலை சமூகம் உடனடியாக கிளிநொச்சி பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு அறியப்படுத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு பிரவேசித்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர், சிதறி கிடந்த தோட்டாக்களை மீட்கும் பணியினை பாதுகாப்பான முறையில் முன்னெடுத்தனர்.
இதன்போது 150ற்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
--